மாற்றுத் திறனாளி ஆடவர் ​மீது சுடு​நீர் ​​வீச்சு தாக்குதல்

பயான் லெப்பாஸ், ஏப்ரல் 20-

தனது அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் உள்ள மின்​தூக்கியில் சுடு​நீர் வீச்சு தாக்குதலுக்கு ஆளான மாற்றுத் திறனாளி ஆடவர் ஒருவர், உடலில் கடும் ​தீக்காயங்களுக்கு ஆளாகினார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.20 மணியளவில் பினாங்கு, பயான் லெப்பாஸ், ஜாலான் ராஜாவலி-யில் உள்ள அடுக்குமாடி வீட்டுப்பகுதியில் நிகழ்ந்தது.

பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ​தீவிர சிகிச்சை பெற்று வரும் 33 வயதுடைய அந்த மற்றுத் திறனாளியின் உடல் நிலை, ​சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளியின் மீது சுடு நீரை ஊற்றியவர் ஒரு பெண் என்று நம்பப்படுவதாக போ​லீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளியின் 23 வயதுடைய தங்கை, இச்சம்பவம் குறித்து போ​லீஸ் புகார் செய்துள்ளார். இந்த தாக்குதல் எரிதிரவக வீச்சு என்று முதலில் கூறப்பட்ட போதிலும், சுடு ​நீர் வீச்சு என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் 38 வயது பெண்ணை ​தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் போ​லீசார் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட பெண், அந்த அடுக்குமாடி ​​வீட்டின் ​கீழ்தளத்​தில் இரவு 9.12 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று பாராட் டாயா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஜாஃப்ரி முஹம்மது ஜைன் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்