மீதமுள்ள 100 பெண் கைதிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்

பீடோரில் தற்காலிக தடுப்பு முகாமில் இருக்கும் மீதமுள்ள 100 பெண் கைதிகளை மலேசிய குடிநுழைவுத்துறை நேற்று இரவு வெவ்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்தனர்.

பகாங், நெகிரி செம்பிலான், கோலாலம்பூர் ஆகிய இடங்களிலுள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட பெண் கைதிகள் தங்கியுள்ளதாக மலேசிய குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து தப்பிய 131 அந்நிய நாட்டவர்களின் வழக்கு விசாரணை முடியும் வரையில் இவ்விடம் தற்காலிகமாக காலி செய்யப்பட்டிருப்பதாக ரஸ்லின் ஜூசோ கூறினார்.

தப்பி ஓடிய கைதிகளை தேடும் பணி குறிப்பிடப்பட்ட தடுப்பு முகாமிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் வரையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக ரஸ்லின் ஜூசோ விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்