மீன் பிடிக்கும்போது ஏற்பட்ட வெள்ள பெருக்கு, இருவர் தேடப்படுகின்றனர்

கோலாலம்பூர், ஏப்ரல் 01 –

கோலாலம்பூர், செரி கெம்பாங்கான்-னிலுள்ள மொன்சூன் வடிக்காலில் நேற்று ஐவர் அடங்கிய குடும்பத்தினர் மீன் பிடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, திடிரென ஏற்பட்ட நீர் பெருக்கில் அவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.

அச்சம்பவத்தில் 40 வயது தந்தையான அஹ்மத் சுரியாடி , 9 வயது மகனான மோஹட் அலிப் உயிர் தப்பிய வேளையில், 10 வயது மகன் மோஹட் டிஹாம் சடலமாக மீட்கப்பட்டார்.

தாயாரான 38 வயது ஜூலியானா, அத்தம்பதியரின் கடைசி பிள்ளையான 4 வயது ரிஸ்க்கா அமெலியா இன்னமும் தேடப்பட்டு வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 4.35 மணியளவில் தகவல் கிடைத்ததாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கமிசியோனிற் A A அன்பழகன் தெரிவித்தார்.

மாலை 3.30 மணியளவில் மீன் பிடித்திருந்த போது, திடிரென பெய்த மழையால் நீர் பெருக்கு ஏற்பட்டு சிமெண்ட்டிலான வடிக்கால் மீது நின்றுக்கொண்டிருந்த அவர்கள் பின்னர் 1.2 மீட்டர் ஆழம் கொண்டு நீரில் தடுமாறி விழுந்ததாக அவர் கூறினார்.

மாலை மணி 5.30 வாக்கில் இரண்டாவது மகனை பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்ட வேளையில், தேடல் மீட்பு நடவடிக்கையில் மாலை மணி 7 வாக்கில் சம்ப இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உயிரிழந்த சிறுவனின் உடல் மீட்கப்பட்டதாக அசிஸ்டென் கமிசியோனிற் A A அன்பழகன் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்