KK மார்ட் கடை மீது தாக்குதல், எழுவரிடம் விளக்கம் பெறப்பட்டது

பேராக், ஏப்ரல் 01 –

பேராக், பீடோர் அருகேயுள்ள KK மார்ட் நிறுவன கடையின் மீது, கடந்த வாரம் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பில், கடை பணியாளர்கள், பொதுமக்கள் என 7 நபர்களிடம் போலீஸ் விளக்கத்தைப் பதிவு செய்துள்ளது.

துரோகம் புரிந்த குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் 427 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும் வேளை, இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை என தாப்பாஹ் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் மோஹட் நாயீம் அஸ்னாவி தெரிவித்தார்.

CCTV காணொலி பதிவுகளை தவிர, சம்பவ இடத்திலிருந்து விசாரணைக்கு உதவக்கூடிய வேறு எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, சம்பவ இடத்தில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கு முன்பு, வாகனம் ஒன்றில் வந்த ஆடவர், அந்த கடையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்