லஞ்சத்தை துடைத்தொழிப்பதில் SPRM மிற்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் குரல் கொடுக்காதது ஏன்? ? பிரதமர் அன்வார் கேள்வி

கோலாலம்பூர், பிப்ரவரி 29 –

லஞ்சத்தை துடைத்தொழிப்பதில் ஸ்.பி.ர்.ம் மிற்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் குரல் கொடுக்காதது ஏன்? ? பிரதமர் அன்வார் கேள்வி

நிதி நிர்வாக முறைகேடுகளுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் லஞ்ச ஊழலை முழு வீச்சில் வேரறுப்பதற்கு பாடுபட்டு வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான ஸ்.பி.ர்.ம் மிற்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் இதுவரை குரல் கொடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஊழலின் மொத்த உருவமாக விளங்கும் மிகப்பெரிய கோடீஸ்வரர்களை விசாரணை செய்து வரும் ஸ்.பி.ர்.ம் மிற்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் குரல் கொடுக்காமல் மெளனம் காத்து வருவது பல்வேறு சந்தேதகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இதில் துரதிர்ஷ்டமான விஷயம் என்னவென்றால் லஞ்ச ஊழல் விசாரணையில் சம்பந்தப்பட்டுள்ள மிகப்பெரிய தலைவர்களை எதிர்க்ட்சியினர் தற்காக்க முனைகின்றனர் என்று பிரதமர் விளக்கினார்.

அந்த பெரும் புள்ளிகளை ஸ்.பி.ர்.ம் விசாரணை செய்வது, நடப்பு அரசாங்கத்தின் பழிவாங்கல் செயலாகும் என்று எதிர்க்கட்சியின் சப்பைக்கட்டு காரணங்களை கூறுகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.

நாட்டில் லஞ்ச ஊழலை துடைத்தொழிப்பது தொடர்பாக எத்தனையோ விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டாலும் அது குறித்து எதிர்கட்சியினர் வாய் திறக்காதது வியப்பை தருகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்