முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரிக்கு தடுப்புக்காவல்

பெட்டாலிங் ஜெயா, மே 17 –

கோலாலம்பூர் மாநகரில் 120 கோடி வெள்ளி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதி அமைச்சு செய்த நிதி ஒதுக்கீட்டில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது மற்றும் முறைகேடு புரிந்தது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அரசாங்க ஏஜென்சி ஒன்றின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரிக்கு நான்கு நாள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு ஏதுவாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் செய்து கொண்ட விண்ணப்பத்தைத் தொடர்ந்து 60 வயது மதிக்கத் தக்க அந்த முன்னாள் தலைமை செயல் அதிகாரியை தடுப்புக்காவலில் வைப்பதற்கு புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்