மேலும் 36 நாடுளின் பயணிகளுக்கு மலேசிய குடிநுழைவு முகப்பிடங்களில் ஆட்டோ கேட் வசதி

புத்ராஜெயா, மே 15-

அடுத்த மாதம் ஜுன் முதல் தேதியிலிருந்து விமான நிலையங்களில் குடிநுழைவுத்துறை முகப்பிடங்களில் மேலும் 36 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு Auto Gate எனப்படும் தானியங்கி ஆட்டோ கேட் வசதி ஏற்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வெளிநாட்டைச் சேர்ந்த பயணிகள், விமான நிலையங்களில் குடிநுழைவுத்துறை முகப்பிட பரிசோதனையின் போது, நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று சைபுடின் குறிப்பிட்டார்.

தற்போது 10 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மட்டுமே இந்த ஆட்டோ கேட் வசதியை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அடுத்த மாதம் முதல் மேலும் 36 நாடுகள், அந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சைபுடின் விளக்கினார்.

புதிய நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியம், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான் சீனா, கனடா, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகியவை அடங்கும்.

இன்று புத்ராஜெயாவில் தேசிய பதிவுத் துறையின் சிறந்த சேவையாளர்களுக்கான விருதளிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியார்களிடம் பேசுகையில் சைபுடின் இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்