மூதாட்டி சொந்தக் காரினால் மோதப்பட்டு உயிரிழந்தார்

ஜொகூர் பாரு, மே 17 –

மூதாட்டி ஒருவர் தனது சொந்தக் காரினால் மோதப்பட்டு பரிதாபமாக மாண்டார். இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் ஜோகூர்பாரு, தாமான் அமார், ஜாலான் செகோர் மானிஸ் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

காரை நிறுத்தி விட்டு, வீட்டின் இரும்புக்கேட்டை திறப்பதற்கு 67 வயதுடைய அந்த மூதாட்டி முற்பட்ட போது, அக்கார் நகர்ந்து, அந்த மூதாட்டியை மோதித் தள்ளியதாக தீயணைப்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

கடும் காயங்களுடன் காரின் அடியில் உடல் சிக்கியதால் சடலத்தை மீட்க தீயணைப்பு மீட்புப்படை உதவி நாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்