மூன்றாம் தரப்பு தலையீடு வேண்டாம்

வரும் பினாங்கு தைப்பூச விழாவை நாட்டுக்கோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்துடன் இணைந்து ஒற்றுமையாக கொண்டாடுவதற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உறுதி பூண்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் வேளையில் இந்து அறப்பணி வாரியத்திற்கு தொடர்பில்லாதவர்கள் தேவையற்ற கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்று அந்த அறவாரியத்தின் தலைவர் RSN ராயர் கேட்டுக்கொண்டார்.

இந்து அறப்பாணி வாரியத்தின் தங்க ரத வேல், பினாங்கு குயின் ஸ்திரீட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து அருள்மிகு ஸ்ரீ பாலதெண்டாயுதபாணி ஆலயத்திற்கு டாக்சியின் மூலம் கொண்டு செல்லப்பட்டிருப்பதால் அது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு அல்ல என்று இந்து அறப்பணி வாரியத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ இராமச்சந்திரன் பத்திரிகையில் வெளியிட்டுள்ள கருத்து அவசியமற்றது என்றும், அதை சொல்வதற்கு அவர் யார் என்றும் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் RSN ராயர் கேள்வி எழுப்பினார்.

டத்தோ ராமச்சந்திரன் தற்போது பினாங்கு இரண்டாவது துணை முதல்வர் ஜக்டீப் சிங் அலுவலகத்தில் ஓர் அதிகாரியாக பணிபுரிகிறார். அப்பொறுப்பில் இருந்து கொண்டு அவர் வெளியிடக்கூடிய கருத்து, அதனை துணை முதல்வரின் அலுவலகத்தின் கருத்தைப் பிரதிநிதிப்பது போல் சித்தரிக்கப்பட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று RSN ராயர் குறிப்பிட்டார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தில் உள்ள ஆணையர்கள் அனைவரும் எந்தவொரு அலவன்ஸ் தொகையைப் பெறாமல் இலவசமாகவே தங்கள் சேவையை வழங்குகிறார்கள். யாரும் அரசியல் லாபத்திற்காக சேவையாற்றவில்லை. அந்த முருகப் பெருமானுக்காக சேவையாற்றி வருகின்ற காரணத்தினால் இந்து அறப்பணி வாரியம் தொடர்பான விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையீடு அவசியமற்றது என்று RSN ராயர் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்