மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக டான் ஸ்ரீ முஹ்யிட்டின் சீராய்வு மனு தாக்கல்

கோலாலம்பூர், மார்ச் 27

ஜானா விபாவா திட்ட நிதிமுறைகேட்டிலிருந்து தம்மை விடுவித்திருந்த உயர்நீதிமன்றத்தின் முடிவை ரத்து செய்த கோலாலம்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முஹ்யிட்டின் யாஸ்சின் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சேத்தன் ஜேத்வானி சட்ட நிறுவனத்தின் மூலமாக அந்த மனு பதிவு செய்யப்பட்டது.

ஜானா விபாவா திட்டத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக தொடரபட்ட வழக்கில், பேரிக்காதான் நசியனால் கூட்டணி தலைவருமான டான் ஸ்ரீ முஹ்யிட்டின் யாஸ்சின் மீதான 4 குற்றச்சாட்டுகள் தெளிவற்றதாக உள்ளதாக கூறி, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் கடந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அவ்வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்திருந்தது.

பின்னர், அத்தீர்ப்பை எதிர்த்து அரச தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், மூவர் அடங்கிய நீதிபதி அமர்வுக்கு தலைமைத் தாங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஹதாரியாஹ் சுயேட் அலி, கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தார்.

டான் ஸ்ரீ முஹ்யிட்டின்-னுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தெளிவாக உள்ளதால், அவ்வழக்கை மீண்டும் நடத்துவதற்கு அவர் அனுமதி அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்