ரமடான் காலத்தில் 4,000 இரத்தப் வங்கிகள் தேவைப்படுகின்றன

ஜொகூர் பாரு, மார்ச் 26.

ஜொகூர் பாரு, சுல்தானா அமினா மருத்துவமனையின் இரத்த மாற்றுப் பிரிவிற்கு ரமடான் மாதம் முழுவதும் சுமார் 4,000 இரத்தப் வங்கிகள் தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது.

விபத்துக்கள், அறுவை சிகிச்சைகள், இரத்தமாற்ற நடவடிக்கைகள் உட்பட தலசீமியா நோயாளிகள் போன்ற நடைமுறைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இவை தேவைப்படுவதாக மாநில சுகாதார, சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் லிங் தியான் சூன் கூறினார்.

இந்த நோன்பு காலத்தில் மருத்துவமனை பயன்பாட்டில் இரத்த விநியோகம் எப்போதும் போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக குறிப்பிடப்பட்ட இரத்த வங்கிகள் தேவைப்படுவதாக லிங் தியான் சூன் விளக்கினார்.

பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் ரமடான் மாதத்தில் சேகரிக்கப்படும் இரத்தத்தின் அளவு மற்ற நாட்களை காட்டிலும் 25 சதவீதம் குறைவாகவே காணப்படும் என்று லிங் தியான் சூன் குறிப்பிட்டார்.

ஒருநாளைக்கு இவ்விடத்தில் 250 இரத்த வங்கிகள் தேவைப்படுவதாகவும் குறுகிய அளவிலேயே இரத்த வங்கிகள் இருப்பதால் ஜொகூர் மக்கள் தானகவே முன்வந்து இரத்த தானம் செய்வார்கள் என்று பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் இன்று கேட்டு கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்