ரயிலில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி விதியை மீறியிருக்கவில்லை.

கோலாலம்பூர், மே 21-

தங்களுக்கு சொந்தமான ரயிலில் நடத்தப்பட்ட பிங்கிஷ் திருவிழா எனும் இசைநிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் விதிமுறைகளை மீறியிருக்கவில்லை என கெரெத்தா ஆப்பி தானா மெலாயு நிறுவனம் – KTMB தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூர்-ரிலிருந்து செரண்டா-வுக்கு இருவழி பயணம் அடிப்படையில், அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழுவினர், சிறப்பு ரயில் பெட்டி வாடகை சேவையை நாடியிருந்தனர்.

அத்தரப்பினருக்கு அச்சேவையை வழங்குவதற்கு முன்னர், புகைபிடித்தல், மது அருந்துதல், போதைபொருளை உட்கொள்ளுதல் முதலான சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் அந்நிகழ்ச்சியில் இடம்பெறக்கூடாது என்ற நிபந்தனைகளை தங்கள் தரப்பு விதித்திருந்ததை, KTMB நிறுவனம் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்குமுன்பு, சம்பந்தப்பட்ட ரயில் சேவையில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி, இதர பயனர்களுக்கு தொந்தரவை வழங்கியதாக சமூக ஊடகங்களில் அதிருப்திகள் பரவிய நிலையில், KTMB நிறுவனம் அந்த விளக்கத்தை அளித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்