UITM பல்கலைக்கழகத்தில் பூமிபுத்ரா அல்லாத மருத்துவர்கள் பயில தற்காலிகமாக இடமளிக்க கோரிக்கை

ஷாஹ் அலாம், மே 21-

மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் – UITM-மில், பூமிபுத்ரா அல்லாத மருத்துவர்கள், இதய அறுவைச் சிகிச்சை துறையில் நிபுணத்துவ கல்வியை தொடர, தற்காலிகமாக வாய்ப்பளிக்க வேண்டுமென அதன் இயக்குநர் வாரிய முன்னாள் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர். இப்ராஹிம் ஷா அபு ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.

நடப்பில், UITM பல்கலைக்கழகம் மட்டுமே தேசிய இருதயக் கழகம் – IJN உடன் இணைந்து இருதய அறுவைச் சிகிச்சைக்கான நிபுணத்துவ பாடத்திட்டத்தை வழங்குகின்றது.

அத்தகைய சூழலில், அத்துறையில் நிபுணத்துவ கல்வியைத் தொடர விடாமல், பூமிபுத்ரா அல்லாத மாணவர்களை, UITM பல்கலைக்கழகம், தவிக்க விடுவது சரியல்ல.

அது தவிர, நாட்டில் தற்போது இருதய அறுவைச் சிகிச்சை துறையில், நிபுணத்துவ மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றது.

ஆகையால், பொதுநலனைக் கருத்தில் கொண்டு, பூமிபுத்ரா அல்லாத மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட துறையில், நிபுணத்துவக் கல்வியைப் பெற, UITM பல்கலைக்கழகம் இடமளிக்க வேண்டும் என இப்ராஹிம் ஷா கேட்டுக்கொண்டார்.

இதற்கு முன்பு, UITM பல்கலைக்கழகத்தில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு இடமளிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர். ஜாம்பிரி அப்துல் கதிர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்