UMNO, DAP-யை விமர்சிக்கும் PAS கட்சிக்கு 16ஆவது பொதுத்தேர்தலில் தோல்வியே மிஞ்சும்!

பெட்டாலிங் ஜெயா, மே 21-

மக்களுக்கு பயனளிக்கக்கூடிய கொள்கைகளை முன்வைக்காமல், வெறுமனே UMNO-வையும் DAP-யையும் தொடர்ந்து விமர்சித்துவரும் PAS கட்சியின் போக்கு, அக்கட்சிக்கே பாதகத்தை விளைவிக்கும்.

குறிப்பாக, நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில், அக்கட்சி படுதோல்வி காண்பதற்கான சாத்தியம் உள்ளதாக, MARA தொழில்நுட்ப பல்கலைக்கழகம் – UITM-ம்மைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அரிஃப் அய்சுதீன் அஸ்லான் தெரிவித்துள்ளார்.

16ஆவது பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளே எஞ்சியிருக்கின்ற சூழலில், பெரிக்காதான் நசியனால் கூட்டணியில் அதிக தொகுதிகளுடைய கட்சியாக விளங்கும் PAS, பழைய பாணியிலான அரசியலையே நடத்தி வருகின்றது.

நடப்பு ஒற்றுமை அரசாங்கத்திற்கு, தாங்களே சிறந்த மாற்றாக விளங்குவதற்கான நம்பிக்கையை மக்களிடம் அவர்கள் இன்னும் ஏற்படுத்தவில்லை.

புதிய கருத்தியல்களை முன்வைக்காமல் PAS கட்சியினர் அமைதி காத்து வந்தால், அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு ஒற்றுமை அரசாங்கத்திற்கே கிடைக்கும் என அரிஃப் அய்சுதீன் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்