ரிங்கிட்டின் மதிப்பை நிலையாக நிர்ணயிக்கும் திட்டம் இல்லை நிதி அமைச்சு திட்டவட்டம்

கோலாலம்பூர், மார்ச் 19 –

கடந்த 1998 ஆம் ஆண்டு ஆசிய நிதி நெருக்கடியின் போது மலேசியா மேற்கொண்டதை போல ரிங்கிட்டின் மதிப்பை நிலையாக நிர்ணயிக்கும் திட்டத்தை அரசாங்கம் தற்போது கொண்டிருக்கவிலை என்று இரண்டாவது நிதியமைச்சர் அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு ரிங்கிட்டின் மதிப்பை நிலையாக நிர்ணயிக்கும் போது நாட்டின் அன்றைய பொருளாதார நிலை, தற்போது இருப்பதுபோல இல்லை என்று அமிர் ஹம்சா விளக்கினார்.

அன்றைய பொருளாதார சூழ்நிலைக்கும், இன்றைய பொருளியல் வளர்ச்சிக்கும் முற்றிலும் மாறுப்பட்டதாக இருப்பதால் அன்றைய நாளில் கையாளப்பட்ட யுக்தியை மலேசியா மீண்டும் பின்பற்ற இயலாது என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

உதாரணத்திற்கு, கடந்த 1998 ஆம் ஆண்டு பொருளாதார நிலையில் பங்கு சந்தை 76 விழுக்காடு வீழ்ச்சி கண்டது. ஆனால், இவ்வாண்டு முற்பகுதியில் பங்கு சந்தை 6 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது.

தவிர, 1998 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் நாட்டின் மொத்த உற்பக்தி விகிதத்தில் 16 விழுக்காடாக இருந்தது. ஆனால், தற்போது வெளிநாட்டு கடன் நாட்டின் மொத்த உற்பக்தியில் 2 அல்லது ஒரு விழுக்காடு மட்டுமே இருப்பதாக அமிர் ஹம்சா சுட்டிக் காட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்