லங்காவிலிருந்து 2,000 வாகனங்கள் வெளியேறுகின்றன

லங்காவி, ஏப்ரல் 7 –

நோன்பு பெருநாளை முன்னிட்டு, விடுமுறைக்கு செல்வதற்கு மொத்தம் 2,000 வாகனங்கள் லங்காவி தீவிலிருந்து பிரதான நிலப்பகுதிக்கு உரிமையாளர்களால் கொண்டு வரப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் இவ்வாண்டு வாகனங்கள் வெளியேற்றப்பட்டதன் எண்ணிக்கை 18 சதவீதமாக அதிகரித்திருப்பதாக லங்காவி மேம்பாட்டு வாரியத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மாட் பூவாட் செ அனி அப்துல் கானி தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஐந்து நாட்களுக்கு 2,000 வாகனங்கள் பிரதான நெடுஞ்சாலைக்கு கொண்டு வரப்பட்டதாக அஹ்மாட் பூவாட் கூறினார்.

கார்கோ மற்றும் பெரி சேவையை சேர்ந்த ஆறு நிறுவனங்களின் மூலம் குவாலா கெடா விலிருந்து குவாலா பெர்லிஸ் சிற்கு சம்பந்தப்பட்ட வாகனங்கள் கொண்டு வரப்பட்டதாக அஹ்மாட் பூவாட் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்