லாரிக்கு அடியில் சிக்கி இருவர் மரணம்

உலு சிலாங்கூர், மார்ச் 11 –

புக்கிட் பெருந்துங் பலாசா அருகிலுள்ள புக்கிட் பெருந்துங் மற்றும் புக்கிட் செந்தோசா இடையிலான பிரதான சாலையில் மூன்று வாகனங்கள் மோதி கொண்டதில் இரண்டு வெளிநாட்டவர்கள் மரணமுற்றனர்.

நேற்று இரவு 10:10 மணியளவில் தீயணைப்பு நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற புகாரை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புப்படை துறையின் உதவி இயக்குநர் அகமாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

Bukit Sentosa தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஏழு பேர் கொண்ட குழுக்களுடன் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றதாக அகமாட் முக்லிஸ் கூறினார்.

இவ்விபத்தில் டேங்கர் லாரி உட்பட சாலையோரத்தில் பழுதடைந்திருந்த Hyundai Accent மற்றும் Demak EX90 மோட்டார் சைக்கிள் ஆகியவை அடங்கும் என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட 40 வயதுடைய அவ்விரு பிரஜைகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்தின் போது டேங்கர் லாரியின் அடியில் சிக்கியதாகவும் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகவும் அகமாட் முக்லிஸ் இன்று ஓர் அறிக்கையில் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்