2026 ஆம் ஆண்டு முதல் புதிய கல்வியாண்டு ஜனவரியில் தொடங்கும் மாணவர்களின் பாடத்திட்டத்தை ஒருபோதும் பாதிக்காது

கோலாலம்பூர், மார்ச் 10 –

2026 ஆம் ஆண்டு முதல் மாணவர்களின் புதிய கல்வியாண்டு ஜனவரிக்கு திரும்பும் நடவடிக்கையை தொடர்ந்து பள்ளி பாடத்திட்டம் ஒருபோதும் பாதிப்படையாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓர் ஆண்டிற்கு மொத்தம் 150 பள்ளி நாட்களுடன் பாடத்திட்டம் வழக்கம் போல் நடத்தப்படும் என்று கல்வி தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் தெரிவித்தார்.

இதுக்குறித்து பிள்ளைகளின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவலைப்பட வேண்டாம் என்றும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதினால் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறை ஒருவேளையும் பாதிப்படையாது என்று அஸ்மான் அட்னான் கூறினார்.

இத்திட்டம் மாணவர்களின் கல்வி கற்பித்தலுக்கு இடையூறாக இருக்காது என்பதுடன் எப்போதும் போலவே பாடங்கள் வகுப்பில் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சகம் உறுதியளித்துள்ளதாக அஸ்மான் அட்னான் விளக்கினார்.

150 நாட்கள் மட்டுமே ஒரு வருடத்தில் பாடவகுப்பு இருப்பதுடன் பள்ளி விடுமுறையில் சற்று மாற்றம் இருப்பதுடன், விடுமுறை நாட்கள் குறைக்கப்படும் என்று அவர் விளக்கினார்.

2024 /2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு பிப்ரவரி 2025 – யில் தொடங்குவதை குறித்து அதற்கான கல்வி நாட்காட்டியை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை ஆரம்பித்துள்ளதாக கல்வி அமைச்சர் பட்லினா சைடேக் தெரிவித்தார்.

இன்று முதல் ஜோகூர்,கெடா,கிளாந்தான் ,திரங்கானு ஆகிய மாநிலங்களில் தொடங்கியுள்ள 2024/2025 ஆம் ஆண்டு பள்ளி அமர்வில் மொத்தம் 1.44 மில்லியன் மாணவர்கள் நுழைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

மற்ற மாநிலங்களில் நாளை திங்கட்கிழமை முதல் பள்ளி அமர்வு தொடங்கும் என்று பட்லினா சைடெக் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்