வேறு வழிகள் இல்லாததால், கோல குபு பாரு வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரை தேர்வு செய்தனர்

புத்ராஜெயா, மே 17-

நாட்டில், அரசியல் நிலைத்தன்மை நீடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே, நடந்து முடிந்த கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அங்குள்ள வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் பாங் சாக் தாவோ-வை ஆதரித்தனர்.

வாக்களிப்பதில் அவர்களுக்கு வேறு வழிகள் இல்லை என்பதால், அந்த வெற்றியில் ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்கள் மார்த்தட்டி பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடாது என UMNO-வை சேர்ந்த டத்தோ டாக்டர் பூவாட் சர்காஷி தெரிவித்தார்.

மக்களின் பிரச்சனைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படாததால், அரசாங்கத்தின் மீது அவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதே உண்மை.

ஆயினும், அரசாங்கம் இன்னும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு தங்களின் பிரச்சனைகளை களைவதற்கு அவகாசத்தை வழங்க வேண்டும் எனும் நோக்கில், அவர்கள் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரை ஆதரித்துள்ளனர்.

ஆகையால், மக்களின் வாழ்க்கை செலவினம் உள்ளிட்ட பிரச்சனைகளை களைவதில் அரசாங்கம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டுமென
பூவாட் சர்காஷி வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்