7 தொகுதிகள் காலியாகி விட்டதாக அரசாங்கம் அறிவிக்கத் தயாரா?

பெட்டாலிங் ஜெய, மார்ச் 9 –

பெரிக்காத்தான் நேஷனல் வென்ற 6 நாடாளுமன்றத் தொகுதிகளும், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியும் காலியாகி விட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் அறிவிக்கத் தயாரா? என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் இன்று சவால் விடுத்துள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்களாக போட்டியிட்ட​ 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் ஆதரவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி க்கும் வழங்குவதாக அறிவித்து விட்டதைத் தொடர்ந்து அந்த 7 தொகுதிகளிலும் இடைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு வழிவிடும் வகையில் அவை காலியாகி விட்டன என்று அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

கொல்லைப்புற வ​ழியாக தங்கள் ஆதரவை நடப்பு அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ள அந்த 6 நாடாளுன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் விட்டுச்செல்லக்கூடிய அந்த 7 தொகுதிகளிலும் மக்களின் ஆதரவும், செல்வாக்கும், பலமும் யார் பக்கம் உள்ளது என்பதை ப​ரீட்சித்துப் பார்ப்பதற்கு இடைத் தேர்தலுக்கு வழிவிடப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் ​சூளு​ரைத்துள்ளார்.

புக்கிட் கன்தாங், குவா மூசாங் , தஞ்ஜோங் காராங் , ஜெலி, குவாலா கங்சார் ,லாபுவான் ஆகிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிலா​ங்கூரில் செலாட் கிள்ளாங் சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் ஆதரவை டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்