வலதுசாரி மலாய்க்கார்ரகளின் ஆதரவை பெறுவதில், PKR முனைப்பு காட்ட வேண்டியதில்லை

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 19-

நாட்டில், பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி ஆட்சி நீடிக்கவேண்டுமெனில், வலது சாரி மலாய்க்காரர்களின் ஆதரவை பெறுவதில் அது முனைப்பு காட்ட வேண்டுமென உம்னோ இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் கைரி ஜமாலுதீன் முன்வைத்திருந்த பரிந்துரையை, PKR கட்சியைச் சேர்ந்த பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம் அக்கருத்தை ஆமோதித்தார்.

மலாய் சமூகத்தினர் பொருளாதார ரீதியில் பிளவுப்பட்டுள்ளனரே தவிர கருத்தியல் ரீதியாக அல்ல கடைநிலையிலும் நடுத்தரத்திலும் இருக்கின்ற மலாய்க்காரர்களின் நல்வாழ்வை மேலோங்கச் செய்வதில் அக்கட்சி கவனம் செலுத்த வேண்டும்.

மக்களிடமிருந்து பரந்த ஆதரவு கிடைப்பதை உறுதிபடுத்துவதற்கு, மலாய்க்கார்ர்கள் அல்லாதவர்களின் சமூக மேம்பாட்டிலும் , PKR கட்சி கவனம் செலுத்துவது அவசியம் என ஹசான் கரீம் வலியுறுத்தினார்.

கடந்த 1999ஆம் ஆண்டு ஏப்ரலில் அரசியல் கட்சியாக தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து, பல சமூகத்தினர் சார்ந்த கட்சியாக PKR இருந்து வருகின்றது. அதில், அடிப்படை உறுப்பினராகும் வாய்ப்பும் பதவிகளும் அனைத்து இனங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்