வலுக்கும் மல்யுத்த வீரர்களின் எதிர்ப்பு, 2 விருதுகளை திரும்ப அளிப்பதாக வினேஷ் போகத் அறிவிப்பு.

டெல்லி, மார்ச் 27-

மத்திய அரசின் தயான்சந்த் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்க வேண்டும் என்ற கனவு கலைந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது.

இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாகவும் எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக நாட்டின் முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் அவரை கைது செய்யக்கோரி மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார்.

இதன்பின்னர், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்களை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் மத்திய அமைச்சரிடம் நேரடியாக முறையிட்டு இருந்தனர். எனினும், மல்யுத்த சம்மேளனத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்செய் சிங் வெற்றி பெற்று தலைவராக தேர்வு ஆகினார். இது மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது.

இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்‌ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மல்யுத்த வீராங்கனை ஷாக்‌ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் இருந்தே விலகுவதாக கண்ணீருடன் பேட்டியளித்தார். பிரஸ்மீட்டில் கண்ணீருடன் பேசிய அவர், இனி மல்யுத்த போட்டியில் நான் விளையாட போவதில்லை என்று அழுதுகொண்டே அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீது இன்னும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பதால் இப்படி அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பிரதமர் மோடிக்கும் உருக்கமான கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கடிதத்தில், நாட்டிற்காக வாங்கப்பட்ட இந்த பதக்கங்களை எல்லாம் திரும்ப வழங்க வேண்டுமா? ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்க வேண்டும் என்ற கனவு கலைந்து வருகிறது என கூறியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்