வாகனம் ஓட்டும் திறமையை காட்ட, சாலை விபத்து ஏற்படுத்திய நபர்

பத்து பஹாட், பிப்ரவரி 22 –

தொழிற்சாலை பணியாளர் ஒருவர் வாகனம் ஓட்டும் திறமையை காட்டுவதற்கு முற்பட்டு சாலை விபத்து விளைவித்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்தனர்.

நேற்று புதன்கிழமை பொதுமக்களுக்கு விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய அந்நபரின் காணொளி ஒன்று முகநூலில் பரவலாக வைரலாகியதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக பத்து பஹாட் ஒ.சி.பி.டி சுப்ட் ஷாஹ்ருலானுவார் முஷாதத் அப்துல்லா சானி தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு 12:15 மணியளவில் தாமன் தேச பொடானி, ஜாலான் தேச பொடானி 1 யில் மாற்றியமைக்கப்பட்ட ஸ்பொர்ட்ஸ் காரில் சென்ற அந்நபர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது மோதியதாக விசாரணையில் தெரியவந்ததாக ஷாஹ்ருலானுவார் முஷாதத் கூறினார்.

பின் 20 வயதுடைய அந்நபரை கைது செய்யப்பட்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இன்று பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக கொண்டு வரப்படவுள்ளார் என்று ஷாஹ்ருலானுவார் முஷாதத் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்