வாகனம் நிறுத்தியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 14 பேர்

செப்பாங், கம்போங் பாரு டெங்கில்லில் வாகனம் நிறுத்தியதால் சாலை இடையூறு ஏற்பட்டதாக சண்டையிட்டு கொண்ட 14 பேரை போலீசார் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் அண்டை வீட்டுக்காரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தியதால் சாலை மறியல் ஏற்பட்டதாக அந்நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும் செபாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.

16 முதல் 40 வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இன்று ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக Wan Kamarul கூறினார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 148/506 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று Wan Kamarul விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்