KEVIN MORAIS கொலை வழக்கு, அறுவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை நிலைநிறுத்தம்

புத்ராஜெயா, மார்ச் 14 –

9 ஆண்டுகளுக்கு முன்பு, அரசு தரப்பு துணை வழக்கறிஞர் டத்தோ அந்தோணி கெவின் மொராய்ஸை கொலை செய்தற்காக 6 ஆடவர்களுக்கு உயர்நீதிமன்றம் விதித்திருந்த தூக்குத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.

61 வயதுடைய முன்னாள் நோயியல் நிபுணர், கர்னல் டாக்டர் ர்.குணசேகரன், 53 வயதுடைய S.ரவிசந்திரன், வேலையில்லாத நபர்களான 32 வயது ர்.டினிஷ்வரன், 31 வயதரே..ஏ.கெ தினேஷ்குமார், 34 வயது ம்.விஷ்வநாத், 31 வயது S.நிமலன் ஆகியோர் செய்திருந்த மேல்முறையீட்டை நீதிபதி டத்தோ ஹாதாரியா சைட் இஸ்மாயில் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு ஒருமனதாக நிராகரித்து, தீர்ப்பளித்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி, கோலாலம்பூர்,மெனாரா டூத்தா விலுள்ள தனது அடுக்கக வீட்டிலிருந்து போரோத்தோன் பெர்டானா ரக காரில் புறப்பட்ட வழக்கறிஞர் டத்தோ அந்தோணி கெவின் மொராய்ஸ் அதன் பின்னர் காணாமல் போனார்.

பின்னர், செப்டம்பர் 16ஆம் தேதி சுஆங் ஜெயா விலுள்ள ஓர் இடத்தில் சிமெண்ட் நிரப்பபட்ட எண்ணெய் கலம் ஒன்றில், அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட அந்த அறுவரும் கெவின் மொராய்ஸை கொலை செய்ததற்கான நோக்கத்தைக் கொண்டிருந்ததாகவும் தாங்கள் அதில் ஈடுபட்டிருக்காததை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பதில், அவர்கள் தோல்வி கண்டிருப்பதாகவும் கூறி, உயர்நீதிமன்ற நீதிபதி டத்துக் அஸ்மான் அப்துல்லா கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி அவர்கள் அனைவருக்கும் தூக்குத்தண்டனை யை விதித்து தீர்ப்பளித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்