MH 370 விமானத்தை தேடும் திட்டம்

புத்ராஜெயா, மார்ச் 22.

பத்து வருடங்களுக்கு முன்பு 239 பேருடன் மர்மமான முறையில் காணாமல் போன மலேசிய ஏர்லைன்சிஸ்ற்கு சொந்தமான MH 370 விமானம் குறித்து புதிய தேடலுக்கான வழிமுறைகள் குறித்து கடலாய்வு ரோபோட்டிக் நிறுவனமான Ocean Infinity வரும் மே மாதம் புதிய ஆய்வறிக்கையை மலேசியாவிடம் சமர்ப்பிக்கவிருக்கிறது.

அமெரிக்காவை தளமாக கொண்ட Ocean Infinity நிறுவனம் தாம் கொண்டுள்ள புதிய தேடல் திட்டம், பத்து ஆண்டு காலமாக நீடித்து வரும் ஒரு மர்மத்திற்கு விடை காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த அமெரிக்க நிறுவனத்தின் பரிந்துரை குறித்து போக்குவரத்து அமைச்சு எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்னதாக அமைச்சரவையில் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்