வெளிநாட்டவர்களின் 10 வணிகத் தளங்களில் சோதனை நடத்தப்படும்

நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 10க்கும் மேற்பட்ட வணிக தளங்கள், ‘மினி டாக்கா’ என்ற குடியிருப்பு பகுதிகளை போலீசார் சோதனை மேற்கொள்ளவுள்ளனர்.

சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பிரச்னை தொடர்ந்து அதிகரிக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட இடங்களில் இச்சோதனை நடத்தபடவிருப்பதாக போலீஸ்படை துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்தார்.

கிள்ளானில் மட்டுமில்லாமல் ஜோகூர், கெடா, கிளந்தான் ஆகிய மாநிலங்களிலும் இச்சோதனை மேற்கொள்ளவிருப்பதாக அயோப் கான் கூறினார்.

சம்பந்தப்பட்ட இலக்கை கண்டறியப்பட்டதுடன் தகவல் கசிவை தவிர்க்க இதுக்குறித்து ஊடகங்களுக்கு பிறகு விளக்கம் அளிக்கப்படுவதாகவும் இன்று கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் (புலபோல்) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அயோப் கான் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்