வெள்ளத்திற்கு பிறகு 122 பேர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்

மலாக்கா, ஏப்ரல் 15-

மலாக்காவில் நேற்று மதியம் பெய்ந்த கனத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து இன்று காலை 8 மணி வரையில் மொத்தம் 122 பேர், மூன்று நிவாரண மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு குடும்பங்களை உள்ளடக்கிய 12 பேர் தங்குவதற்கு நேற்று இரவு 11 மணியளவில் ஜாப்பெருன் ஆயர் கெரோஹ் மண்டபம் திறக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை குழுவின் செயலாளர் காமரூல்ஷா முஸ்லீம் தெரிவித்தார்.

அலோர் காஜாவில் 25 குடும்பங்களை சேர்ந்த 72 பேர் டூரியான் துங்காள் இடைநிலைப்பள்ளியிலும் 7 குடும்பங்களை உள்ளடக்கிய 38 பேர் புக்கிட் பாலாய் ராயா -விலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருப்பதாக காமரூல்ஷா முஸ்லீம் கூறினார்.

இடைவிடாமல் பெய்ந்த கனமழையினால் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடியதாக காமரூல்ஷா முஸ்லீம் மேலும் தகவல் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்