APMM கடற்கொள்ளையர்கள் ஐவரை கைது செய்துள்ளது

கோத்தா திங்கி, ஏப்ரல் 15-

ஜொகூர்பாரு கடற்பரப்பில் பழைய உலோகங்களை ஏற்றி செல்லும் இழுவைப்படகு உட்பட விசைப்படகு ஆகியவற்றை கொள்ளையடிக்க முயன்ற ஐந்து இந்தோனேசியர்கள் பிடிப்பட்டனர்.

நேற்று காலை 10.45 மணியளவில் போங்கவான் 9 மற்றும் ஹெக்ஸாகிறோ 8 ஆகிய படகுகளில் உள்ள சரக்குகள் ஒரு கும்பலால் கொள்ளையடிக்க முற்படுவதாக ஜொகூர் துறைமுக ஆணையத்திடமிருந்து புகார் கிடைக்க பெற்றதாக மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் மற்றும் தஞ்சுங் செடிளி கடல்சார் மண்டலத்தின் கொமாண்டர் மோஹட் நஜிப் தெரிவித்தார்.

படகில் தப்பிச் செல்ல முற்பட்ட 31 முதல் 53 வயதுடைய இந்தோனேசிய கடற்கொள்ளையர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக மோஹட் நஜிப் கூறினார்.

சந்தேகிக்கும் அந்நபர்கள் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரையில் உலோகத்தை கொள்ளையடித்து அண்டை நாடுகளுக்கு கடல்வழியாக செல்ல முயன்றது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் அறிவித்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 380 மற்றும் குடிநுழைவு சட்டம் 6 (1)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இன்று முதல் அடுத்த 14 நாட்களுக்கு கைது செய்யப்பட்ட அந்நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்படுவதாக மோஹட் நஜிப் மேலும் தகவலளித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்