வெ 1.3 மில்லியன் சிகரெட்டுகள் பறிமுதல்

தெனோம், மார்ச் 24 –

தெனோம் மிலிருந்து சிபிதாங் கிற்கு செல்லும் 40 ஆவது கிலோமீட்டரில் 1.3 மில்லியன் வெள்ளி மதிப்பிலான இரண்டு மில்லியன் சிகரெட்டுகளை சபா, மலேசிய சுங்கத்துறை பறிமுதல் செய்தனர்.

கடந்த மார்ச் 16 ஆம் தேதி காலை 6 மணியளவில் சட்டவிரோதமாக பொருட்களை கடத்தி சென்றதற்காக இசுது ரக லாரியை கெனிங்கௌ அமலாக்கத் துறையின் அதிகாரிகள்
கைப்பற்றினர்.

இச்சோதனையில் இரண்டு மில்லியன் சிகரெட்டுகளை உள்ளடக்கிய 100,000 பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக சபா, மலேசிய சுங்கத்துறையின் உதவி இயக்குநர் டத்துக் மொகமாட் நாசிர் டெராமான் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யபட்ட லாரி உட்பட பொருட்களின் மொத்த மதிப்பு 15 லட்சத்து 66 ஆயிரம் என்று மொகமாட் நாசிர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட லாரியில், ஓட்டுநர் எதுவும் இல்லாதது விசாரணையில் கண்டறியப்பட்டதாக மொகாமாட் நாசிர் மேலும் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்