வெ.4000 லஞ்சம் பெற்ற அமலாக்க அதிகாரி கைது !

ஹேமா எம் எஸ் மணியம்

கோத்தா கினாபாலு, மார்ச் 21 –

பணம் பரிமாற்ற நிறுவனத்தைப் பாதுகாப்பதாக கூறி ஒவ்வொரு மாதமும் 500 வெள்ளி பணத்தை லஞ்சமாக பெற்ற அமலாக்க அதிகாரி ஒருவரை சபா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளதாக அதன் தலைமை அதிகாரி டத்தோ கருணாநிதி சுப்பையா தெரிவித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் குற்றச்சாட்டப்பட்டிருக்கும் 40 வயதுடைய அந்நபர் பணம் பரிமாற்ற நிறுவனத்திடமிருந்து 4,000 வெள்ளி வரையில் லஞ்சம் பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

சந்தேகிக்கும் அந்நபர் நேற்று காலை 9 மணியளவில் சபா, மலேசிய ஊழை தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்கு சாட்சியமளிக்க வந்த போது எம்.ஏ.சி.சி -யால் கைது செய்யப்பட்டதாக கருணாநிதி கூறினார்.

கைது செய்யப்பட்ட அந்த அதிகாரி இன்று கோத்தா கினாபாலு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படயிருப்பதாக கருணாநிதி மேலும் விவரித்தார்

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்