வேலையற்ற நபருக்கு 5 ஆண்டு சிறை

கோலாலம்பூர், மே 17-

இன்ஸ்டாகிராம் செயலி மூலம் தமக்கு புதியதாக அறிமுகமான வயது குறைந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக 21 வயது இளைஞருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 5 ஆண்டு சிறை மற்றும் 2 பிரம்படித் தண்டனை விதித்தது.

அந்த இளைஞர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி முகமது கஃப்லி சே அலி இத்தண்டனையை விதித்தார்.

அந்நபர் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி மாலை 4 மணியளவில் சுங்காய் பெசி-யில் உள்ள PPR கார் நிறுத்தும் இடத்தில் 15 பெண்ணுக்கு எதிராக இப்பாலியல் குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்