ஸ்மாட் வாகனம் நிறுத்தும் சேவை மூலம் வெ 1.5 லட்சம் லாபம்

கெடா மாநிலத்தில் முதல் Smart City இலக்கு திட்ட​த்தில் கூலிம் மாவட்டத்தின் Smart வாகனம் நிறுத்தும் சேவையின் மூலம் கடந்த இரண்டு வருடத்தில் 15 லட்சம் வெள்ளி லாபம் ஈட்டப்பட்டுள்ளதாக கூலிம் நகராண்மைக் கழகத்தின் த​லைவர் Dato Haji Elmi Yusoff தெரிவித்துள்ளார்.

கூலிம் மாவட்டத்தை இன்னும் பல கோணங்களில் விவேக நகராக உருமாற்றம் செய்வதற்காக Hi- Tech Padu ( ஹய்தேக் பாடு ) நிறுவனத்துடன் கூலிம் நகராண்மை கழகம் கருத்திணக்க ஒப்பந்தத்தை கொண்டுள்ளதாக Elmi Yusoff குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தம், 7 விதமான கூறுகளை உள்ளடக்கியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். கூலிம் நகரின் பொருளியல் வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் , உள்கட்டமைப்பு ஆகியவை இவற்​றில் அடங்கும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

2021 ஆம் ஆண்டில் தொடங்கிய Smart வாகனம் நிறுத்தும் திட்டத்தை கூலிம் மாவட்டத்தில் இதுவரை 83 ஆயிரம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்று இன்று Kulim Inn தங்கும் விடுதியில் நடைபெற்ற கூலிம் நகராண்மை​க் கழகம் மற்றும் Hi- Tech Padu பாடு நிறுவனத்துடனான கருத்திணக்க ஒப்பந்த நிகழ்வில் Elmi Yusoff மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஒப்பந்த நிகழ்வில் கெடா மாநில அரசின் சீனர் , இந்தியர் , சயாமியர் மற்றும் அரசு சார்ப்பற்ற இயக்கங்கள் மீதான ஆட்சி குழு உறுப்பினர் Wong Chia Zhen, Hi- Tech Padu நிறுவனத்தின் தலைமை அதிகாரி Salmi Nadia Mohd Ismail மற்றும் கூலிம் மாவட்ட அதிகாரி Haji Mohd Jan Haji Ramli ஆகியோர் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்