ஹரிமாவ் மலாயா அணி தொடக்க ஆட்டங்களில் புள்ளிகளைப் பெறும்

கத்தார், துபாயில் நடைபெற இருக்கும் ஆசியக் கிண்ணக் காற்பந்து போட்டியின் தொடக்க ஆட்டங்களில் தேசிய காற்பந்து அணியான ஹரிமாவ் மலாயா நிச்சயமாக புள்ளீகளைச் சேகரித்து புள்ளிப் பட்டியலில் முதன்மை இடங்களைப்ம்பிடிக்கும் என முன்னாள் காற்பந்து வீரரான டத்தோ ஸைனால் அபிடின் ஹசான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 12 முதல் பிப்ரவரி 10 வரையில் நடைபெற உள்ள இப்போட்டியில் ஒரு ஆட்டத்தில் ஜோர்டன் அணியையும் மற்றோர் ஆட்டத்தில் பாஹ்ரெய்ன்அணியையும் தேசிய அணி சந்திக்க உள்ளது.

முந்தைய ஆட்டங்களில் மலேசிய அணி வெளிப்படுத்திய அடைவுநிலையை முறையாக மதிப்பீடு செய்து அதனைக் கலைய தேசிய அணியின் தலைமை பயிற்றுநர் கிம் பான் கோன் தற்போது அணியைச் செம்மைப் படுத்தி இருக்கிறார்.

எனவே, மலேசியக் காற்பந்து ரசிகர்கள் மத்தியில் தேசிய அணியின் ஆட்டங்கள் தனித்துத் தெரியும், வேறுபாடும் முன்னேற்றமும் தெரியும் என அவர் மேலும் சொன்னார்.

E குழுவில் இடம்பெற்றுள்ள தேசிய அணி ஜோர்டன் உடன்ஜனவரி 15 ஆம் தேதியும் பார்ரெய்ன் உடன் ஜனவரி 20 ஆம் தேதியும் களம் காண உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆசியக் கிண்ணத்தை இரு முறை வெற்றி கொண்ட தென் கொரியாவை ஜனவரி 25 ஆம் தேதி சந்திக்க உள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்