ஹெலிகாப்டர் விபத்தை குறித்த காணொளிகளை பரப்ப வேண்டாம்

கோலாலம்பூர், ஏப்ரல் 23-

பேராக், லுமுட்- டில் இன்று காலை விழுந்து நொறுங்கிய அரச மலேசிய கடற்படை இராணுவத்திற்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்களின் சம்பவத்தை குறித்த காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்று தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்ஜில் கேட்டுக் கொண்டார்.

இவ்விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் காணொளிகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்றார் பாஹ்மி பட்ஜில்.

மேலும், சம்பந்தப்பட்ட காணொளி பாதிக்கப்பட்டவர்களின் நெருக்கமானவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்த வல்லதாக இருப்பதால் அச்செயலை தவிர்க்க வேண்டும் என்று பாஹ்மி பட்ஜில் வலியுறுத்தினார்.

தாக்கத்தை விளைவிக்கும் வகையில் காணொளிகள் பகிரப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தக்க தண்டனை எடுப்பதற்கு தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் செயல்படும் என்று பாஹ்மி பட்ஜில் இன்று தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்