1.44 மில்லியனுக்கும் அதிகமானோர் இன்று புதிய கல்வியாண்டு தொடங்கினர்

கோலாலம்பூர், மார்ச் 10 –

2024/2025 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டினை நாடு முழுவதும் உள்ள பாலர்பள்ளி தொடங்கி ஐந்தாம் படிவம் மாணவர்கள் வரையில் மொத்தம் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் தொடங்கவிருக்கின்றனர்.

இன்று முதல் குழு ஏ – வை சேர்ந்த ஜோகூர்,கெடா, திரங்கானு,கெலாந்தான் ஆகிய இடங்களில்
பள்ளிகள் திறந்திருப்பதால் 1.44 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் புதிய கல்வியாண்டினை தொடங்கியிருப்பதாக கல்வி தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் தெரிவித்தார்.

குழு B – யை சேர்ந்த மற்ற மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அஸ்மான் அட்னான் கூறினார்.

பள்ளி திறந்த முதல் வாரத்தில் பாடத்திட்டம் எதுவும் நடத்தப்படாதது கல்வி அமைச்சகம் நடைமுறைப்படுத்தியது இதுவே இரண்டாவது ஆண்டாகும்.

இது முதலாம் ஆண்டு மாணவர்கள் உட்பட முதல் படிவ மாணவர்களுக்கு புதியதொறு சூழலை பழக்கப்படுத்திக்கொள்ள கொடுக்கப்படும் ஒரு கால அவகாசம் ஆகும் என்று அஸ்மான் அட்னான் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்