450 இடங்களில் ரஹ்மா ரமலான் விற்பனை

பாப்பார், மார்ச் 10 –

நாடு முழுவதும் உள்ள 450 இடங்களில் ரஹ்மா ரமாடான் விற்பனை பி.ஜே.ர் திட்டத்தை அமல்படுத்த உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்த PJR Ramadan திட்டம் அசல் விற்பனை விலையுடன் ஒப்பீடுகையில் 10 முதல் 30 சதவிதம் வரையில் கட்டண கழிவு தரவல்லது என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்கை செலவின அமைச்சர் டத்துக் அர்மிசான் மொகமாட் அலி தெரிவித்தார்.

மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களான கோழி, இறைச்சி, மீன், அரிசி, முட்டை ஆகியவற்றி‌ற்கும் இந்த பி.ஜே.ர் ரமாடான் பங்காற்றும் என்று அர்மிசான் மொகாமாட் கூறினார்.

மலேசிய மீன் மேம்பாட்டு வாரியம் மற்றும் மத்திய வேளாண் சந்தைப்படுத்துதல் ஆணையமான பாமா ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மக்களுக்கு மலிவான விலையில் பொருட்களை வழங்கப்படுவதாக அர்மிசான் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்