100 பேர் இன்னும் நிவாரண மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்

பேரா மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களில், நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்தவர்களின் எண்ணிக்கை 529 பே‌ரி‌லிருந்து 100 ஆக குறைந்துள்ளது.

மொத்தம் 29 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இன்னமும் 5 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பேரா மாநில பேரிடர் துயர் துடைப்பு மையம் தெரிவித்துள்ளது.

தைப்பிங்கில், 22 குடும்பங்களை சேர்ந்த 66 பேர் இன்னும் நான்கு நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்த வேளை, Kuala Kangsar – ரில் 7 குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 34 பேர் Dewan Orang Ramai Kampung Talang Masjid – டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்