120 விலைமாதர்கள், உபசரணைப்பெண்கள் கைது

குவாந்தான், மார்ச் 9 –

உபசரணைப்பெண்கள் என்ற போர்வையில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் விலைமாதர்கள் உட்பட 120 கைது செய்யப்பட்டனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பகாங், குவந்தானில் 17 கேளிக்கை மையங்களில் குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் எந்தவொரு பயணப்பத்திரத்தையும் கொண்டிருக்காத அந்த வெளிநாட்டுப் பெண்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் விலைமாதர்களாக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று குடிநுழைவுத்துறையின் துணை தலைமை இயக்குநர் ஜாப்ரி இம்போக் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 103 பெண்கள், தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள். இருவர் லாவோஸ், மேலும் 11 பேர் வியட்நாம் அறுவர் இந்தோனேசியா, மியன்மாரை சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

19 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர்களிடம் எந்தவொரு அடையாள ஆவணமும் இல்லை என்று ஜாப்ரி இம்போக் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்