156.029 வர்த்தக குற்றவியல் புகார்கள் பெறப்பட்டுள்ளன

கோலாலம்பூர், ஜன – 4,

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முடிவடைந்த 2023 ஆம் ஆண்டு வரை வர்த்தக குற்றங்கள் தொடர்பாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 029 புகார்களை பெற்றுள்ளதாக அதன் வர்த்தக குற்றப்புலனாய்வுப்பிரிவு போலீஸ் இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகம்மட் யூசோஃப் தெரிவித்தார்.

இதன் வாயிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மொத்தம் 1,433 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த வர்த்தக குற்றங்கள் மேற்கண்ட ஆண்டுகளில் கட்டம் கட்டமாக குறைந்துள்ளது என்ற போதிலும் கடந்த ஆண்டு மட்டும் அதிகமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிகையில் கடந்த ஆண்டு மட்டும் வர்த்தக குற்றங்கள் 53.2 விழுக்காடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முகம்மட் யூசோஃப் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்