171 வங்காள தேச தொழிலாளர்கள் குறித்து விசாரணை நடக்கிறது

நாட்டில் வேலை கிடைக்காமல் இருக்கின்ற 171 வங்காள தேச தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட விசாரணை நடந்து வருவதாக மனிதவ்ள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

ஜோகூர், பாயு டாமாய் தெலுக் ரமூனியாவில் பணியமர்த்தம் செய்யப்படுவதாகக் கூறி அந்த வங்காள தேசத் தொழிலாளர்களை மலெசியாவுக்குத் தருவித்த ஏஜென்சிக்களையும் உட்படுத்தி தமது அமைச்சு விசாரணையை நத்தி வருவதாக ஸ்டீவன் குறிப்பிட்டார்.

அதே சமயம், இவ்விவகாரம் தொடர்பில் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலைச் சந்தித்து தாம் பேச இருப்பதாகவும், வெளிநாட்டுத் தொழிலாளர் சார்ந்த கொள்கை சார்ந்து மேம்படுத்தப்படவும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக ஸ்டீவன் சொன்னார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்