2026 Komanwel விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்துவதை தீர ஆராய்வீர்!

கோலாலம்பூர், மார்ச் 15 –


2026 Komanwel போட்டியை ஏற்று நடத்தும் முடிவை எடுப்பதற்கு முன்னர், அது குறித்து மலேசிய அரசாங்கம் முழுமையாகவும் ஆழமாகவும் ஆராய்வது அவசியம் என இளைஞர் மற்றும் விளையாட்டு முன்னாள் அமைச்சர் டத்துக் ஶ்ரீ ரீசென் மெரிக்கன் னைனா மெரிக்கன் வலியுருத்தினார்.

சம்பந்தப்பட்ட போட்டிக்கு இன்னும் ஈராண்டுகளே எஞ்சியிருக்கின்ற சூழலில், அந்த குறுகிய காலத்தில் அப்போட்டிக்கான தயார்நிலை பணிகளை மேற்கொள்வது கடினம் என்றாரவர்.

2026 Komanwel போட்டியை ஏற்று நடத்தும் வாய்ப்பு மலேசியாவுக்கு முறையான திட்டமிடலின் கீழ் வழங்கப்படவில்லை.

அப்போட்டியை ஏற்று நடத்துவதிலிருந்து ஆச்திரோலியா வின் விக்தோரியா மாநிலம் பின்வாங்கியதை தொடர்ந்து மலேசியாவுக்கு திடீரென அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டில் Komanwel போட்டியை மலேசியா சிறப்பாக நடத்தி முடித்திருப்பதால், நம் நாட்டிற்கு அப்போட்டியை நடத்தும் தகுதி உள்ளதாக கருதி Komanwel விளையாட்டு சம்மேளனம் அந்த வாய்ப்பை வழங்குகின்றது.

மிக குறுகிய காலத்தில் விளையாட்டு அரங்குகள், தன்னார்வலர்கள் உள்பட அனைத்து விளையாட்டு கூறுகளை தயார் செய்வது இயலாத காரியம் எனவும் டத்துக் ஶ்ரீ ரீசென் மெரிக்கன் கூறினார்.

Komanwel போட்டியை ஏற்று நடத்தினால், மலேசியாவின் நிதி தேவைக்கு ஆதரவளிக்க Komanwel விளையாட்டு சம்மேளனம் மலேசிய மதிப்பில் 601 மில்லியன் ரிங்கிட் நிதியை அளிக்கவுள்ளது.

அது குறித்து, கருத்துரைத்த டத்துக் ஶ்ரீ ரீசென் மெரிக்கன், அப்போட்டிக்கு மிகப் பெரிய தொகை தேவைப்படுவதாகவும் அடுத்தாண்டு மலேசியா உலகத் தலைவர்கள் கலந்துக்கொள்ளும் ஆசியான் மாநாட்டை ஏற்று நடத்தவுள்ளதால் அதற்கும் அதிக செலவுகள் செய்ய வேண்டியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

Komanwel போட்டியைவிட, ஆசிய விளையாட்டு போட்டியையும் தனித்தும் ஒலிம்பிக் போட்டியை ஆசியான் நாடுகளுடன் இணைந்து நடத்துவதிலும் மலேசியா கவனம் செலுத்த வேண்டுமெனவும் டத்துக் ஶ்ரீ ரீசென் மெரிக்கன் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்