SST புதிய வரி விதிப்பு: வணிகர்களே பொருட்களின் விலையை நிர்ணயிக்கின்றனர்!

கோலாலம்பூர், மார்ச் 15 –

நாட்டில் இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கி, விற்பனை சேவை வரி 6 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, வணிகர்களே பொருட்களின் விலைகளை நிர்ணயிப்பதாக, மலேசிய உத்தாரா பல்கலைக்கழகத்தின்
பொருளாதாரம், நிதி மற்றும் பொருளக ஆய்வியல் துறை மையத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் னோர் ஹாபிசா மொகமாட் இஸ்மாயில் தெரிவித்தார்.

SST வரி உயர்வு, உணவு போன்ற அடிப்படை தேவைகள் சார்ந்த பொருட்களையும் தொலைத்தொடர்பு சேவைகளையும் உட்படுத்தியிருக்கவில்லை.

ஆனால், கடந்த இரு வாரங்களில் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பேரங்காடிகள், ரமலான் சந்தைகளில் பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் சில பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

விநியோக சங்கிலியின் உயிர் நாடியாக பொருள் அனுப்பும் சேவை விளங்கும் வேளை, SST வரி உயர்வால் வணிகர்களின் செலவுகளும் அதிகரித்துள்ளன.

தாங்கள் நிர்ணயித்துள்ள அதிக இலாபத்தை பெற, விலையை எவ்வளவு உயர்த்த வேண்டுமென அத்தரப்பினர்களே தீர்மானிப்பதாக டாக்டர் னொர் ஹாபிசா மொகமாட் இஸ்மாயில் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்