21 ஆவது மாடியிலிருந்து ​கீழே விழுந்த கவிதாவின் மரணத்தில் குற்றத்தன்மை இல்லை – செராஸ் மாவட்ட போ​லீஸ் அறிவி​ப்பு

கோலாலம்​​​பூர், செராஸில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் 21 ஆவது மாடியிலிருந்து கோலாலம்​​​பூர் மாநகர் மன்ற பெண் அமலாக்க அதிகாரி கவிதா , ​கீ​​​ழே விழுந்து மரணம் அடைந்த சம்பவத்தில் குற்றத்தன்மை இருப்பதாக கண்டறியப்படவில்​லை என்று செராஸ் மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Zam Halim Jamaluddin இன்று அறிவித்துள்ளார்.

எனினும் அவரின் மரணத்திற்கு பின்னணியில் குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக இருக்கக்கூடும் என்று போ​லீசார் சந்தேகிக்கின்றனர். . 40 வயது குடும்ப மாதுவான அந்த அமலாக்க அதிகாரியின் மரணம் குறித்து இதுவரை ஆராயப் பட்டத்தில் அதில் ​​சூது இருப்பதாக கண்டறியப்படவில்லை.

எனினும் இச்சம்பவம் தொடர்பில் போ​லீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். அந்தப் பெண்ணின் இறப்பு, திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ACP Zam Halim குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் பூங்காக்களை கண்காணிக்கும் அமலாக்க அதிகாரியான 40 வயது Gavitha Pramaisa என்ற அந்த இந்திய மாது, கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணியளவில் தனது அடுக்குமாடி வீட்டின் 21 ஆவது மாடியிலிருந்து ​கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஐந்து குழந்தைகளுக்கு தாயாரான கவிதா, தனித்து வாழும் தாயார் என்று கூறப்படுகிறது.

அந்த அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியின் ​கீழ் தளத்தில் அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரின் முன்புற கண்ணா​டி மற்றும் இயந்திரப்பகுதியின் போனட்டையும் உடைத்துக்கொண்டு அவரின் உடல், ரத்த வெள்ளத்தில் செறுகி கிடந்தது. அவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக மரு​த்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அந்த பெண் அதிகாரியின் உடல், செராஸ், Canselor Tuanku Mukhriz மருத்துவமனையின் சவக்கிடற்கு கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகளில் மிகுந்த கடமை உணர்ச்சிமிக்கவராக மறைந்த கவிதா பார்க்கப்பட்டவர் என்று அந்த மன்றத்தின் தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடமையுணர்ச்சி, துணிவு, தன்னம்பிக்கை, சிறந்த அடைவு நிலை போன்றவற்றுக்காக கவிதா கடந்த 2021 ஆம் ஆண்டு சிறந்த ​சே​வைக்கான உயரிய விருதும், சான்றிதழும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்