3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பாண்ட் குறித்து அரசாங்கத்திற்குத் தெரிவிக்கப்பட வில்லை

கோலாலம்பூர், ஜன – 8,

1MDB வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வரும் வேளையில், அந்நிறுவனம் வெளியிட்ட 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான போன் பத்திரங்கள் குறித்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட வில்லை என மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணைய புலனாய்வாளர்கள் கூறியுள்ளனர்.

போன் பத்திர வெளியீட்டின் மூலம் Goldman Sachs ஆல் நிர்வகிக்கப்படும் நிதிகள் இரண்டு மின் உற்பத்தியாளர்களான Tanjong Energy Holdings Sdn Bhd மற்றும் Mastika Lagenda Sdn Bhமாகியவற்றில் இருந்து பங்குகளை 1MDB  பெற வழி வகை செய்தது.

1MDB Energy மற்றும் 1MDB Energy (Langat) க்கு International Petroleum Investment Co (IPIC) உத்தரவாதத்தைப் பெற Aabar Investment PJS உதவியது, அதே நேரத்தில் Goldman Sachs நிறுவனம் 1MDB போன் பத்திரங்களை சேகரிக்க உதவியது.

இந்த பரிவர்த்தனைகள் எதையும் அமைச்சரவையிடம் நஜிப் தெரிவித்தது இல்லை என எம்ஏசிசி புலனாய்வு அதிகாரி Nur Aida Arifin கூறினார்.

பங்குதாரரான நஜிப் ஒப்புதல் கையெழுத்திட்ட பிறகு, 1MDB இன் இயக்குநர்கள் IPP இல் பங்குகளை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்க ஒரு சுற்றறிக்கை தீர்மானத்தில் கையெழுத்திட வேண்டும்,

1MDB இல் ஒரு முடிவு எடுக்கப்பட்டு, இயக்குநர்கள் குழு அதற்கு இணங்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. அதனை அவசர அவ்சரமாக நஜிப் செய்து முடித்திருக்கிறார் என எம்ஏசிசி புலனாய்வு அதிகாரி Nur Aida Arifin தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணை. எதிர்வரும் ஜனவரி 24 ஆம் தேதி, நீதிபதி Collin Lawrence Sequerah முன்னிலையில் நடக்க இருக்கிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்