38 மில்லியன் வெள்ளி இழப்பீட்டு தொகை கோரி KK சூப்பர்மார்ட் வழக்கு

ஷாஹ் அலாம், மார்ச் 26.

அல்லா சொல் கொண்ட சர்ச்சைக்குரிய காலுறைகளை தருவித்த க்ஸின் ஜியான் சாங் விநியோகிப்பு நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் சொஹ் சின் ஹுவாட் தங்களுக்கு இழப்பீடாக 38 மில்லியன் வெள்ளியை வழங்க வேண்டுமென கூறி KK சூப்பர்மார்ட் & சூப்பர்ஸ்டோர் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

ஷாஹ் அலாம் உயர்நீதிமன்றத்தில் நேற்று அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை, அந்நிறுவனத்தின் வழக்கறிஞர் டேவிட் குருபதம் உறுதிபடுத்தியதாக, மலாய் மெயில் இணைய செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

KK சூப்பர்மார்ட் -டிற்கு ஏற்பட்டுள்ள சேதம், புற்சா மலேசியா பங்கு சந்தையில் இடம்பெறுவதற்கான பரிந்துரை ரத்து செய்யப்பட்டது முதலானவற்றால், தங்களது வர்த்தகம் பெரும் பாதிப்புக்கு இலக்காகியுள்ளது.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் அனைத்தையும் சர்ச்சைக்குரிய காலுறைகளை தருவித்த நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதர இழப்புகளை நீதிமன்றமே மதிப்பாய்வு செய்து, அந்நிறுவனத்தை ஏற்றுக்கொள்ள வகை செய்ய வேண்டுமெனவும் KK சூப்பர்மார்ட் வழக்கு மனுவில் கூறியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்