KK SUPERMART நிறுவன உரிமையாளர்களான தம்பதியர் மீது குற்றச்சாட்டு

சிலாங்கூர், மார்ச் 26.

KK சூப்பர்மார்ட் & சூப்பர்ஸ்டோர் நிறுவன தோற்றுநரான 57 வயதுடைய டத்தோ ஸ்ரீ டாக்டர் சாய் கீ கான், நிறுவன இயக்குநரான 53 வயதுடைய அவரின் மனைவி டத்தின் ஸ்ரீ லோஹ் சியூ முய் ஆகியோர் சிலாங்கூர், ஷாஹ் அலாம்-மிலுள்ள சேசியேன் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.

அல்லா சொல் கொண்ட காலுறையை விற்பனை செய்து, இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தியதாக, அவர்களுக்கு எதிராக நீதிபதி முகம்மது அனஸ் மஹட்சிற் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட தம்பதியர், இஸ்லாமிய மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில், அந்த சர்ச்சைக்குரிய காலுறையை வேண்டுமென்றே விற்பனை காட்சி அலமாரியில் வைத்ததாகவும் அதை 32 வயதுடைய நபர் கொண்டதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிலாங்கூர்,பண்டார் சன்வேய்-யிலுள்ள KK சூப்பர்மார்ட் & சூப்பர்ஸ்டோர் நிறுவன கடையில், கடந்த 13ஆம் தேதி காலை மணி 6.30 அளவில் அவ்விருவரும் அக்குற்றத்தை புரிந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்து அவ்விருவரும் மேல்விசாரணைக் கோரியுள்ளனர். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது அவையிரண்டுமே அவ்விருவருக்கும் விதிக்கப்படலாம்.

இதற்கு முன்பு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய காலுறை தொடர்பில், கடந்த 16ஆம் தேதி நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கீ கான் உள்பட அந்நிறுவனத்தின் முக்கிய தரப்பினர் மன்னிப்பு கோரியிருந்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்