3,903 குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீரிக்கப்பட்டுள்ளன

கோலாலம்பூர், மார்ச் 19 –

மலேசிய குடியுரிமை விண்ணப்பங்களில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி வரையில் 21 வயதுக்கு கீழ்பட்டவர்களில் 3,903 விண்ணப்பங்களை உள்துறை அமைச்சு அங்கீரித்துள்ளதாக அதன் அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுதியன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இந்த விண்ணப்பங்கள் யாவும் கூட்டரசு அரசியலமைப்புச்சட்டம் 15 ஆவது விதியின் கீழ் அங்கீரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுருங்கச் சொன்னால், குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 80 வி ழுக்காடு அங்கீரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எஞ்சிய விண்ணப்பங்கள் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும், பாதுகாப்பு அம்சங்களினாலும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சைபுடின் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்