3R பிரிவை பயன்படுத்துவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்

கோலாலம்பூர், மார்ச் 26.

1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டத்தை நிலை நிறுத்துவதற்காக, இனம், சமயம் மற்றும் மலாய் ஆட்சியாளர்களை உட்படுத்திய 3R விவகாரங்களை காரணமாக கொள்வதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டுமென Lawyers for Liberty அமைப்பின் இயக்குநர் சயிட் மாலெக் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு முறையும் சிவில் உரிமைகள் மீறப்படும் போதெல்லாம் அரசாங்கம் 3R விவகாரங்களை காரணமாக கூறுகின்றது. கழக சீர்த்திருத்தத்தை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, ஆட்சிக்கு வந்த பிறகு, அவ்வாறு நடந்துக்கொள்வது, மக்களை ஏமாற்றும் செயல் எனவும் அவர் சாடினார்.

3R விவகாரங்களுக்கு எதிராக செயல்படும் நடவடிக்கைகளை களைய, இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நிந்தனை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான நடைமுறைகளை தொடங்குவதற்கு, அனுமதி வழங்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சய்ப்புடின் நசுட்டின் இஸ்மாயில் கூறியிருந்தது தொடர்பில், சயிட் மாலெக் அவ்வாறு தெரிவித்தார்
.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்