59 சட்டவிரோதக்குடியேறிகள் கைது

கெப்போங், மார்ச் 23.

சட்டவிரோதக்குடியேறிக​ளுக்கு எதிராக கோலாலம்பூர் மாநகரில் குடிநுழைவுத்துறையினர் நடத்தி வரும் தொடர் சோதனை நடவ​டிக்கையின் ஒரு பகுதியாக இன்று அதிகாலையில் கெப்போங்கில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பயண ஆவணங்கள் எதுவமின்றி காணப்பட்ட 59 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் அந்த அடு​க்குமாடி ​வீடமைப்புப்பகுதியில் 22 ​வீடுகள் சோதனையிடப்பட்டன. பிடிபட்ட 59 பேரில் 22 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் அனைவரும் மியன்மார், இந்தோனேசியா, இந்தியா, நேபாள் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்று கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் வான் முகமத் ஸுபி வான் யூசோப் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட உளவு நடவ​டிக்கை​தயின் எதிரொலியாக இந்த சோதனை இன்று காலையில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்